Oct 19, 2025
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தால்.. காத்திருக்கும் "பொறி" என்ன நடக்கும்.. தாக்கு பிடிக்குமா?

Share:

அல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. வான்வழி தாக்குதல் மூலம் காசா நகரை உருக்குலைத்து வரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலுக்கும் தயாராக உள்ளதாக தெரிகிறது. இஸ்ரேல் ராணுவம் காசா நகருக்குள் நுழைந்தால்.. அதன் முன் இருக்கும் சவால்கள் எனனவென்று பார்க்கலாம்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 7-வது நாளாக நீடித்து வருகிறது. காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை திடீர் தாக்குதலை நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலால் ஒரு நொடி அதிர்ந்து போன இஸ்ரேல், பின்னர் பதில் நடவடிக்கையாக காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேலின் பதில் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தின் காஸா, மேற்கு கரை பகுதிகளை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரால் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இதன்படி, காசா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான்தாக்குதலை தொடுத்து வருகிறது.

இஸ்ரேல் போர் விமானங்களின் இடைவிடாத குண்டுமழையால் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. வானுயர்ந்த கட்டிடங்கள் தரைமட்டம் ஆகி வருகின்றன. இதனிடையே வான்வழி தாக்குதலுடன் காசா மீது தரைவழி தாக்குதலையும் தொடுக்க இஸ்ரேல் தயராகி வருகிறது. இதற்காக எல்லை பகுதியில் 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை இஸ்ரேல் நிலை நிறுத்தியுள்ளது.

Related News