Jun 17, 2026
Thisaigal NewsYouTube
வங்கதேசத்தில் இடைக்கால அரசை அகற்ற ராணுவத் தளபதி  தீவிரம்
உலகச் செய்திகள்

வங்கதேசத்தில் இடைக்கால அரசை அகற்ற ராணுவத் தளபதி தீவிரம்

Share:

டக்கா, மே.27-

வங்கதேசத்தில் முஹமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை அகற்ற, ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு உளவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த அரசுக்கு ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் முழு ஆதரவு அளித்தார். விரைவில் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்று அவரது தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இடைக்கால அரசு அமைந்து எட்டு மாதங்கள் ஆகியும், தேர்தல் நடத்தாததை அடுத்து, பிற தளபதிகளுடன் வாக்கர் உஸ் ஜமான் அண்மையில் ஆலோசனை நடத்தினார். அவர்கள் பொதுத்தேர்தல் நடத்த சம்மதித்த நிலையில், எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளும் பொதுத்தேர்தலை நடத்த இடைக்கால அரசை வலியுறுத்தின.
இதையடுத்து, வங்கதேச தேசியவாத கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் முஹமது யூனுஸ் ஆலோசனை நடத்தினார்.

பொதுத்தேர்தல் வரும் டிசம்பர் துவங்கி அடுத்தாண்டு ஜூன் வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என யூனுஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்த ராணுவ தளபதி வாக்கர், யூனுசின் இந்த முடிவை விரும்பவில்லை. இதையடுத்து இடைக்கால அரசை அகற்ற தேவையான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்படுத்துவது அரசியலமைப்பு விதிமுறைகளை மீறுவதாக கூறி, அதிபர் முஹமது ஷஹாபுதீனை சந்தித்து அவசரகால நிலையை அறிவிக்க அழுத்தம் கொடுக்கவும், ராணுவ தளபதி வாக்கர் முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவசர நிலையின் போது, இடைக்கால அரசை கலைத்துவிட்டு தேர்தலை விரைவுபடுத்தும்படி அதிபரிடம் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு கவிழ்க்கப்பட்ட 90 நாட்களுக்குள், புதிய அரசு அமைய வேண்டும் என்பதால், முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா ஆகியோரின் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிடும் முடிவையும் வாக்கர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளின் ஆதரவைப் பெற்றுள்ள அவர், அடுத்ததாக இடைக்கால அரசின் தோல்வி குறித்து மக்களிடையே பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை