Oct 20, 2025
Thisaigal NewsYouTube
வேலையே செய்யாத ஊழியருக்கு முழு சம்பளம் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட நிறுவனம்!
உலகச் செய்திகள்

வேலையே செய்யாத ஊழியருக்கு முழு சம்பளம் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட நிறுவனம்!

Share:

இந்தியா, ஜூன் 25-

ஆரம்பத்தில், தன்னால் செய்யக்கூடிய பணிகளை வழங்கியதாகவும் 2002 இல், பிரான்சிற்குள் வேறு ஒரு பகுதிக்கு இடமாற்றம் பெற்ற பிறகு, பொருத்தமான மாற்று வேலையை வழங்குவதற்குப் பதிலாக, எந்த வேலையையும் வழங்கவில்லை என்று லாரன்ஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

பிரான்சில் தொலைத்தொடர்பு நிறுவனமான ஆரஞ்ச் மீது ஒரு பெண் வினோதமான வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். 20 ஆண்டுகளாக முழு சம்பளத்தையும் வழங்கிவிட்டு, தனக்கு எந்த வேலையும் ஒதுக்காமல் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மாற்றுத் திறனாளியான லாரன்ஸ் வான் வாசன்ஹோவ் 1993இல் ஆரஞ்ச் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் தனக்கு இருக்கும் வலிப்பு மற்றும் முடக்குவாதம் காரணமாக வேறு இடத்திற்கு பணியிட மாறுதல் கோரியுள்ளார். அதன்படி இடமாறுதல் பெற்ற பின்னர் நிறுவனம் அவருக்கு வேலைகளை ஒதுக்குவதை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில், தன்னால் செய்யக்கூடிய பணிகளை வழங்கியதாகவும் 2002 இல், பிரான்சிற்குள் வேறு ஒரு பகுதிக்கு இடமாற்றம் பெற்ற பிறகு, பொருத்தமான மாற்று வேலையை வழங்குவதற்குப் பதிலாக, எந்த வேலையையும் வழங்கவில்லை என்று லாரன்ஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

ஆனால், ஆரஞ்சு நிறுவனம் லாரன்ஸின் குற்றச்சாட்டை மறுக்கிறது. அவரை சரியான முறையிலேயே நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது. வான் வாசன்ஹோவின் மருத்துவ நிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு, பணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை பரிசீலனை செய்துவருவதாகவும் கூறியுள்ளது. ஆனால், லாரன்ஸ் தொடர்ந்து உடல்நலக்குறைவுக்கான விடுப்பு எடுத்தது அதைக் கடினமாக்கியது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளளது.

Related News