Oct 17, 2025
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவில் இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் ஹெலிகாப்டர் மாயம்
உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் ஹெலிகாப்டர் மாயம்

Share:

ஜகார்த்தா, செப்டம்பர்.02-

இந்தோனேசியாவில் இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென மாயமாகி உள்ளது. அதை இந்தோனேசியா ராணுவத்தினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்தோனேசியாவின் தெற்கு கலிமண்டன் மாகாணத்தில் உள்ளது கொடாபாரு மாவட்டம். இங்குள்ள விமான நிலையத்தில் இருந்து ஈஸ்ட் இந்தோ ஏர் விமானத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கலிமண்டன் மாகாணம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

அதில் இந்தியர் ஒருவர், அமெரிக்கா, பிரேசில் நாட்டினர் என மொத்தம் 8 பேர் பயணித்தனர். வானில் பறக்கத் தொடங்கிய 8 நிமிடங்களில் ஹெலிகாப்டரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, மண்டேவே பகுதியில் உள்ள 27 கிலோமீட்டர் போர்னியோ வனப்பகுதியில் ஹெலிகாப்டரை ராணுவத்தினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தேடுதல் வேட்டையில் உள்ளூர் போலீசாரும் களம் இறங்கி உள்ளனர்.

Related News