நோம் பென், டிசம்பர்.27-
கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே பல வாரங்களாக நீடித்த எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இன்று டிசம்பர் 27 ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.00 மணி முதல் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன்படி இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் அனைத்து விதமான ஆயுதத் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளன.
கம்போடியாவின் தற்காப்பு அமைச்சர் Tea Seiha மற்றும் தாய்லாந்தின் தற்காப்பு அமைச்சர் Nattaphon Narkphanit ஆகியோர் இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
போர் நிறுத்தம் அடுத்த 72 மணி நேரத்திற்கு வெற்றிகரமாக நீடித்தால், தாய்லாந்து சிறை வைத்துள்ள 18 கம்போடிய வீரர்களை விடுவிக்க அது ஒப்புக் கொண்டுள்ளது.








