Jan 17, 2026
Thisaigal NewsYouTube
துபாயில் 67 அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ
உலகச் செய்திகள்

துபாயில் 67 அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ

Share:

துபாய், ஜூன்.14-

துபாயில் உள்ள 67 அடுக்குமாடி கட்டிடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் குடியிருந்த 3,820 பேரும் எவ்வித காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். துபாய் மரினா பின்னாக்கிள் என்று அழைக்கப்படும் டைகர் டவரின் 67 மாடி குடியிருப்பில் மேல் தளங்களில் தீ ஏற்பட்டது. கட்டிடத்தின் பல பகுதிகளில் தீப்பிழம்புகள் பரவியது.

துபாய் சிவில் பாதுகாப்பு சிறப்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தது. தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 3,820 பேர்களுக்கும் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டது. ஆறு மணி நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்புக் குழுக்கள் முழு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் சம்பவ இடத்தில் உள்ளன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News