சென்னை: அயர்லாந்தில் உள்ள ஒரு தீவில் ஜோடியாக தங்குவதற்கு சம்பளத்துடன் கூடிய ஆஃபர் ஒன்றை கிரேட் பிளாஸ்கட் தீவு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜாலியாக ஊர் சுற்றுவது என்பது பலருக்கும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக இருக்கும். அதிலும் ஜோடியாக இருப்பவர்களுக்கு பல இடங்களையும் சுற்றி பார்க்க ரொம்பவே விருப்பப்படுவார்கள். குறிப்பாக கடல் கடந்து தொலை தூர தேசத்தில் போய் சுற்றி பார்த்து விட்டு வர வேண்டும் என பல ஜோடிகளுக்கும் கனவு இருக்கும். ஆனால், அதற்கு அதிக பணம் செலவு ஆகும் என்பதால் அப்படியே கிடப்பில் போட்டு விடுவார்கள்.
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் உள்ள ஒரு தீவில் ஜோடியாக தங்கலாம்.. கட்டணமே கிடையாது. சொல்லப்போனால் இலவசம் என்பதை விட சம்பளமும் கிடைக்கும். ஆனால் ஒரு கண்டிஷன்.. தீவில் உள்ள காஃபி ஷாப் பணி செய்ய வேண்டும்.. சரி பரவாயில்லை.. அழகிய தீவில் இலவசமாக தங்கலாமே என நினைப்பவர்களுக்கே ஒரு ஜாப் ஆஃபரை வெளியிட்டுள்ளது அயர்லாந்தில் உள்ள ஒரு கிரேட் பிளாஸ்கட் தீவு வெளியிட்டுள்ளது.
காஃபி ஷாப்: இது குறித்து அந்த நிறுவனம் தனது வெப்சைட்டில் கூறியிருப்பதாவது:- கிரேட் பிளாஸ்க்ட் தீவில் உள்ள காஃபி ஷாப்பை நடத்துவதற்கு புதிய ஜோடியை நாங்கள் தேடுகிறோம். அங்கேயே தங்க வேண்டும். இந்த தீவில் கண்ணுக்கு விருந்தளிக்கும் அழகிய இயற்கை காட்சிகளை கொண்டு இருக்கின்றன. பூமியின் சொர்க்கம் என்று சொல்லும் அளவுக்கு திரும்பும் இடமெல்லாம் ரம்மியமான சூழலைக் கொண்டுள்ள இந்த தீவில் காஃபி ஷாப் உள்ளது.