Oct 19, 2025
Thisaigal NewsYouTube
வீல் சேருக்கு அடியில் துப்பாக்கி.. ஹாஸ்பிட்டலில் மாறுவேடத்தில் புகுந்த இஸ்ரேல் படை! அடுத்து பகீர்
உலகச் செய்திகள்

வீல் சேருக்கு அடியில் துப்பாக்கி.. ஹாஸ்பிட்டலில் மாறுவேடத்தில் புகுந்த இஸ்ரேல் படை! அடுத்து பகீர்

Share:

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடரும் நிலையில், மருத்துவமனை ஒன்றில் மாறுவேடத்தில் நுழைந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதல் குறித்த பகீர் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. முதலில் இஸ்ரேல் நாட்டில் புகுந்து ஹமாஸ் படை தீவிரமாகத் தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேல் நாட்டில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா பகுதியில் தீவிரமாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்குள்ள ஹமாஸ் படைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சீக்ரெட் பிளான்: காசாவில் இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் தொடரும் நிலையில், அங்கு இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலின் யுக்தி குறித்த வீடியோ இப்போது வெளிச்சத்திற்கு வெளிவந்துள்ளன. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் இந்த அதிரடி சீக்ரெட் பிளானை நடத்தியுள்ளனர்.

அந்த இஸ்ரேல் வீரர்கள் மருத்துவ பணியாளர்களைப் போலவும் நோயாளிகளைப் போலவும் மாறு வேடமிட்டு, மேற்குக் கரைப் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளனர். பிறகு சில நொடிகளில் அதிரடியாகத் துப்பாக்கியை எடுத்த அவர்கள் அங்கே ரூம் ரூமாக சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கே பதுங்கி இருந்த 3 ஹமாஸ் பயங்கரவாதிகளை அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்

என்ன நடந்தது: இந்த அதிரடி தாக்குதல் போது​​ஹமாஸ் பயங்கரவாதிகள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் அப்போது உள்ளே புகுந்த இஸ்ரேல் வீரர்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்குக்கரை நகரமான ஜெனினில் உள்ள இபின் சினா என்ற மருத்துவமனையில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனைக்குள் புகுந்த இஸ்ரேல் வீரர்கள் திடீரென நடத்திய தாக்குதல்களின் சிசிடிவி காட்சிகள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Related News