ஒஸ்லோ, பிப்ரவரி 29 -
நார்வே மன்னர் ஹரால்ட் வி (Harald V) மலேசியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.விடுமுறைக்காக லங்காவி தீவுக்கு சென்றிருந்தபோது உடல்நலம் குன்றியதால் 87 வயது மன்னர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் எப்போது நாடு திரும்புவார் என்பது தெரியவில்லை.மன்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருதாகவும் அவருடைய உடல்நலம் தேறி வருவதாகவும் நார்வே அரச மாளிகை கூறியது. மன்னர் ஹரால்டால் ஊன்றூகோலின்றி நடக்க முடியாது.
கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நலக் குறைவால் அவதிப்படுகிறார். நார்வே மன்னர் இந்த மாதம்தான் தமது 87ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.