Oct 25, 2025
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

வளர்ப்பு பூனை இறப்பைத் தாங்க முடியாத சோகம்: உயிரை மாய்த்துக் கொண்ட பெண்

Share:

லக்னோ, மார்ச்.02-

உத்தர பிரதேச மாநிலத்தில் வளர்ப்பு பூனை இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல், 32 வயதான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அம்ரோஹா மாவட்டத்தின் ஹசன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு டில்லியைச் சேர்ந்தவருடன் திருமணம் ஆகியது. பிறகு சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பூஜா விவாகரத்து செய்துவிட்டார்.

பிறகு சொந்த ஊர் திரும்பி தாயாருடன் வசித்து வந்தார். தனிமையைப் போக்க அவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். அதன் உடனேயே பெரும்பாலான நேரத்தைச் செலவழித்து வந்தார். இந்த பூனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்து போனது. இதனையடுத்து அதனை அடக்கம் செய்துவிடலாம் என பூஜாவிடம் அவரது தாயார் கூறினார். ஆனால் அதனை ஏற்காத இவர், பூனை மீண்டும் உயிர்பெற்று திரும்பும் என்றார்.

ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. இதனையடுத்து, அந்த பூனையை அடக்கம் செய்யலாம் என தாயார் மீண்டும் கூறினார். இதனையடுத்து தனது அறைக்குச் சென்ற பூஜா கதவை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் மகள் வெளியே வராததால், அந்த அறைக்கு சென்று பார்த்த போது, பூஜா தூக்கில் தொங்கியதை பார்த்து தாயார் அதிர்ச்சி அடைந்தார். அருகில், பூனையின் உடலும் இருந்தது.

தகவல் அறிந்த போலீசார் பூஜாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News