Dec 12, 2025
Thisaigal NewsYouTube
'யுனெஸ்கோ' கலாசாரப் பாரம்பரிய பட்டியலில் தீபாவளி இணைக்கப்பட்டுள்ளது
உலகச் செய்திகள்

'யுனெஸ்கோ' கலாசாரப் பாரம்பரிய பட்டியலில் தீபாவளி இணைக்கப்பட்டுள்ளது

Share:

புதுடில்லி, டிசம்பர்.11-

ஐ.நா.வி பிரிவான 'யுனெஸ்கோ', தீபாவளிப் பண்டிகையை உலகின் கலாசாரப் பாரம்பரியப் பட்டியலில் சேர்த்துள்ளது. ஐ.நா.,வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு 'யுனெஸ்கோ' என்றழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு உலகின் கலாசாரப் பாரம்பரியம் மிக்க இடங்கள், நிகழ்வுகளின் பட்டியலைப் பரிந்துரைகளுக்கு ஏற்ப தொகுத்து வருகிறது.

இந்நிலையில் யுனெஸ்கோவின் கலாசாரப் பாரம்பரியங்கள் குறித்த சந்திப்பு டில்லியில் நடைபெற்றது. அதில், தீபாவளிப் பண்டிகையை உலகின் கலாசாரப் பாரம்பரியப் பட்டியலில் சேர்த்துள்ளதாக யுனெஸ்கோ குழுவினர் அறிவித்தனர். இந்தப் பட்டியலில் சேரும் 16வது பாரம்பரிய நிகழ்வாக தீபாவளி உள்ளது.

கும்பமேளா, கொல்கட்டாவின் துர்கா பூஜை, குஜராத்தின் கர்பா நடனம், யோகா, ராமாயணக் கதையைச் சொல்லும் ராம்லீலா ஆகியவை ஏற்கனவே யுனெஸ்கோ கலாசாரப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தீபாவளிப் பண்டிகையை பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை 2023ல் இந்தியா வழங்கியிருந்தது.

Related News