Oct 17, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய தின விடுமுறை: தாய்லாந்தில் குவிந்த 2 லட்சம் மலேசியர்கள்! 50 மில்லியன் ரிங்கிட் செலவு!
உலகச் செய்திகள்

மலேசிய தின விடுமுறை: தாய்லாந்தில் குவிந்த 2 லட்சம் மலேசியர்கள்! 50 மில்லியன் ரிங்கிட் செலவு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.15-

நாளை செப்டம்பர் 16 மலேசிய தினத்தை முன்னிட்டு, இவ்வார இறுதி முதல், சுமார் 2 லட்சம் மலேசியர்கள் தெற்கு தாய்லாந்திற்கு வருகை புரிந்துள்ளனர் என அந்நாட்டு சுற்றுலாத்துறை கூறுகின்றது.

தங்கும் விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து ஆகியவற்றிற்காக மட்டும் அவர்கள் சுமார் 50 மில்லியன் ரிங்கிட் வரை செலவு செய்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு தாய்லாந்தின் முக்கிய சுற்றுலா நகரங்களான ஹட்யாய், நராதிவாட், யாலா, பட்டானி மற்றும் சொங்க்லா ஆகிய இடங்களில் உள்ள தங்கு விடுதிகளும் உணவகங்களும் மலேசியர்களால் அதிகம் நிரம்பி வழிவதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக தங்கும் விடுதி முன்பதிவுகள் மட்டும் 1 லட்சத்து 20,000-த்தை தாண்டியுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலும் செப்டம்பர் 16 விடுமுறையை முன்வைத்தது என்றும் தாய்லாந்து-தென்கிழக்கு ஆசியாவின் ஹலால் வர்த்தகம் மற்றும் சுற்றுலா சங்கத்தின் தலைவர் அய்டா ஓவ்ஜே தெரிவித்துள்ளார்.

Related News