Jun 22, 2026
Thisaigal NewsYouTube
இயன்றவரை தொடர்ந்து சேவையாற்றுவேன்: பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ்
உலகச் செய்திகள்

இயன்றவரை தொடர்ந்து சேவையாற்றுவேன்: பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ்

Share:

பிரிட்டிஷ், மார்ச் 11 -

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தம்மால் இயன்றவரை மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றப் போவதாகக் கூறியுள்ளார்.

தமது உடல் நலனில் அக்கறை காட்டி ஆறுதல் சொன்ன அனைத்து நல்லுங்களுக்கும் அவர் நன்றி கூறிக்கொண்டார்.

தமது தாயார் 2ஆம் எலிசபெத் அரசியார் காலமான பிறகு 2022இல், 75ஆவது வயதில் அவர் பிரிட்டிஷ் மன்னராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

தற்போது சிகிச்சை பெறும் மன்னர் சார்ல்ஸ் பொது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளார்; தனிப்பட்ட சில சந்திப்புகளை மட்டும் அவர் தொடர்ந்து நடத்திவருவதாக AFP செய்தி கூறுகிறது.

75ஆவது காமன்வெல்த் ஆண்டுநிறைவையொட்டிப் பதிவுசெய்யப்பட்ட உரையில் மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவதே தமது கடமை என்று மன்னர் சார்ல்ஸ் கூறியுள்ளார்.

மன்னர் சார்ல்ஸ் ஓய்வில் இருக்கும்போது அவரது பொறுப்புகளில் பெரும்பாலானவற்றை அவரது மனைவி 76 வயது அரசி கமிலாவும்(Camilla) அவரது மகன் 41 வயது இளவரசர் வில்லியமும் கவனித்துவருகின்றனர்.

Related News

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி