Aug 13, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு:  நால்வர் பலி, 16 பேர் காயம்
உலகச் செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: நால்வர் பலி, 16 பேர் காயம்

Share:

சிகாகோ, ஜூலை.04-

அமெரிக்காவில் இரவு விடுதியொன்றுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2023ல் மட்டும் இது போன்ற சம்பவங்களில், 105 பேர் இறந்தனர்.

இந்நிலையில், சிகாகோவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆர்டிஸ் லவுஞ்ச் என்ற பிரபலமான இரவு விடுதியில், ராப் இசை ஆல்பம் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சி முடிந்து ஏராளமானோர் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, கூட்டத்தை நோக்கி மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 21லிருந்து 32 வயதுக்குட்பட்டவர்கள் என சிகாகோ போலீஸ் தெரிவித்துள்ளது. காயமடைந்த 16 பேரில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியது யார், தாக்குதலுக்கானக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதே இடத்தில், 2022ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு