Oct 19, 2025
Thisaigal NewsYouTube
“ஒத்துக்கவே முடியாது” சந்திரயான் 3 சாதனையை மறுக்கும் சீனா! தூக்கிக்கொண்டு வரும் காரணத்தை பாருங்க
உலகச் செய்திகள்

“ஒத்துக்கவே முடியாது” சந்திரயான் 3 சாதனையை மறுக்கும் சீனா! தூக்கிக்கொண்டு வரும் காரணத்தை பாருங்க

Share:

பெய்ஜிங்: இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் சந்திரயான் 3 தரையிறங்கியது நிலவின் தென் துருவத்தில் இல்லை என்று சீனாவின் மூத்த விஞ்ஞானி விமர்சித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பாராட்டியுள்ளன. இப்படி இருக்கையில் சந்திரயான் 3 தரையிறங்கியது நிலவின் தென் துருவத்தில் கிடையாது என்று சீனாவின் மூத்த விஞ்ஞானி கூறியுள்ளார். வின்வௌி ஆய்வுகளில் சோவியத் ரஷ்யா எப்படி ஒரு காலத்தில் பிரமாண்டமாக வளர்ந்திருந்ததோ, அதேபோன்ற வளர்ச்சியை தற்போது சீனா எட்டி வருகிறது. நிலவுக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவது தொடங்கி, லேண்டர், ரோவர், அங்கிருந்து மண் துகள்களை பூமிக்கு கொண்டு வருதல் என ஏராளமான ஆய்வுகளை சீனா செய்திருக்கிறது.

கடந்த 2004ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இதற்காக 7 மிஷன்களை செயல்படுத்தியுள்ளது. இதில் எதுவுமே தோல்வியடைந்தது கிடையாது. இப்படியான சிறப்பு வாய்ந்த 'சீன சந்திர ஆய்வு திட்டத்தின்' தந்தை என அழைக்கப்படுபவர்தான் உயான் ஜியூன். இவர்தான் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவில்லை என்கிற விமர்சனத்தை வைத்திருக்கிறார். சந்திரயான் 3 திட்டம் மிகைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்திருக்கிறார். அதாவது, "நிலவின் தென் துருவம் என்பது 88.5 முதல் 90 டிகிரி வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்திரயான் 3 விக்ரம் லேண்டனர் 69 டிகிரி தெற்கு அட்சரேகையில் தரையிறங்கி இருக்கிறது. இன்னும் சரியாக சொல்வதெனில் தென் துருவத்தை விட்டு 619 கி.மீ தொலைவில் விக்ரம் லேண்டர் தரையை தொட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார். விண்வெளி போட்டியில் சீனாவுடன் இந்தியாவை ஒப்பிட முடியாது.

Related News