Jun 12, 2026
Thisaigal NewsYouTube
"எல்லை மீறிய கனவு.." தலையை துளையிட்டு மூளையில் சிப் பொறுத்த முயன்ற நபர்.. மிரண்டு போன டாக்டர்கள்
உலகச் செய்திகள்

"எல்லை மீறிய கனவு.." தலையை துளையிட்டு மூளையில் சிப் பொறுத்த முயன்ற நபர்.. மிரண்டு போன டாக்டர்கள்

Share:

தனது கனவுகளைக் கட்டுப்படுத்த நினைத்த ஒருவர் மிக மோசமான விபரீத முயற்சியைச் செய்துள்ளார். இதனால் அவர் உயிரிழக்கும் சூழலுக்கு அவர் சென்று திரும்பியுள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்த காரியம் கிட்டதட்ட அவரது உயிரையே பறித்துள்ளது. மிக மோசமான நிலையில், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் அப்படி என்ன செய்தார் என்பது குறித்துப் பார்க்கலாம்.

இந்த நபர் ரஷ்யாவைச் சேர்ந்த மிகைல் ரதுகா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தனது கனவுகளைக் கட்டுப்படுத்த ஆபத்தான இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். தனது கனவுகளைக் கட்டுப்படுத்த நினைத்த அவர் இதற்காக மண்டை ஒட்டை துளையிட்டு உள்ளே சிப் வைக்க முயன்றுள்ளார். இதுதான் அவரது திட்டம். இதற்காகத்தான் அவர் மண்டை ஓட்டை துளை போட்டுள்ளார்.

தான் எடுத்த விபரீத முயற்சி குறித்து ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் நகரைச் சேர்ந்த இவரே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எப்படி ஆப்ரேஷன் செய்கிறார்கள் என்பதை யூடியூபில் பார்த்து இவரும் இதை முயன்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் ஒரு டிரில்லிங் இயந்திரம் வாங்கினேன்.. என் தலையைத் துளையிட்டு, என் மூளையில் ஒரு சிப்பை பொருத்தினேன்.. இருப்பினும், இதனால் எனக்கு மிகப் பெரியளவில் ரத்த இழப்பு ஏற்பட்டது. இதனால் நான் உயிரிழக்கும் சூழலுக்கும் கூட தள்ளப்பட்டேன்.. இருப்பினும், எனது ஆப்ரேஷன் வெற்றிகரமாகவே இருந்தது. கனவுகளைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை இது திறந்துள்ளது

கடந்த மே 17ஆம் தேதி நானே எனக்கு இந்த ஆப்ரேஷனை செய்து கொண்டேன். மூளையைத் துளையிட்டு உள்ளே எலக்ட்ரோடு பொருத்தினேன்.. கனவுகள் வரும் போது அதை முறையாகச் சோதனை செய்ய எனக்கு இது தேவைப்பட்டது" என்றார். இருப்பினும், இந்த ஆப்ரேஷனால் அவர் உயிரே போகும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முகம் முழுக்க கட்டுக்களுடன் ரஷ்யாவில் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெறும் படங்களை அவரே பகிர்ந்துள்ளார். 40 வயதான ராடுகாவுக்கு ஓராண்டிற்கு முன்பு தான் இந்த வினோத யோசனை வந்துள்ளது. ஓராண்டாக இது குறித்து தீவிரமாக யோசித்த இவர் இப்போது இந்த விபரீதத்தைச் செய்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தான் முதலில் தன்னை வைத்தே இந்த சோதனையைச் செய்யலாம் என அவர் முடிவெடுத்துள்ளார். ஆரம்பத்தில் இதற்காக நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநரிடம் செல்ல அவர் யோசித்துள்ளார். இருப்பினும், இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுப்பார்கள். அப்படிச் செய்தாலும் மருத்துவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும் என்பதால் அவரே ஆப்ரேஷனும் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

Related News

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

போர்நிறுத்தம் முறிந்தது, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்

போர்நிறுத்தம் முறிந்தது, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்