சுபாங் ஜெயா, அக்டோபர்.28-
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கோலாலம்பூரில் இருந்த புருணை சுல்தான், சுல்தான் ஹஸ்ஸானால் போல்கியா இன்று செவ்வாய்க்கிழமை தாயகம் திரும்பினார்.
புருணை சுல்தானை ஏற்றி வந்த சிறப்பு விமானம், மாலை 5.30க்கு கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டது. முன்னதாக, கேப்டன் முகமட் அஸ்நிஸாம் தலைமையில் அரசப் பட்டாள வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை புருணை சுல்தான் ஏற்றுக் கொண்டார். புருணை சுல்தானை வழியனுப்பும் நிகழ்வில் துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கலந்து கொண்டார்.








