Oct 20, 2025
Thisaigal NewsYouTube
கூகல்க்கு 250 மில்லியன் யூரோ அபராதம்
உலகச் செய்திகள்

கூகல்க்கு 250 மில்லியன் யூரோ அபராதம்

Share:

யூரோ, மார்ச் 21 -

பிரான்ஸ் நாட்டின் செய்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பில் கூகல் நிறுவனம் விதிகளை மீறியதால் அந்நாட்டின் போட்டித்தன்மைக் கண்காணிப்பு ஆணையம் அதற்கு 250 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.

கூகல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுச் சேவை குறித்தும் ஆணையம் கவலை தெரிவித்தது.
செய்தி நிறுவனங்கள் வெளியிடும் உள்ளடக்கத்தைக் கொண்டு அதன் தானியக்க உரையாடல் கருவிக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆனால் அது குறித்து செய்தி நிறுவனங்களிடம் தெரிவிக்கப்படவில்லை என்றது The Guardian செய்தித்தளம்.

2022ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு கூகல் உடன்படவில்லை என்ற காரணத்தால் அந்த அபராதம் விதிக்கப்பட்டதாய் ஆணையம் குறிப்பிட்டது.கூகல் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளைப் பயன்படுத்துகின்றன.அதற்காகச் செய்தி நிறுவனங்களுக்கு அவை கட்டணம் செலுத்துவதில்லை.அதனைச் சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியம் பதிப்புரிமையை உருவாக்கியது.

அதன் கீழ் செய்தி நிறுவனங்கள் அவற்றின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும் தளங்களிடமிருந்து இழப்பீடு கோரலாம்.2019ஆம் ஆண்டு பிரான்ஸ் அந்தப் பதிப்புரிமையை நடப்பிற்குக் கொண்டு வந்தது.அதற்கு கூகல் கட்டுப்படத் தவறியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related News