Oct 17, 2025
Thisaigal NewsYouTube
திமோர் லெஸ்டே அதிகாரத்துவ வருகை: பிரதமருக்கு மகத்தான வரவேற்பு
உலகச் செய்திகள்

திமோர் லெஸ்டே அதிகாரத்துவ வருகை: பிரதமருக்கு மகத்தான வரவேற்பு

Share:

டிலி, செப்டம்பர்.23-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், திமோர் லெஸ்டேவிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு, தலைநகர் டிலியைச் சென்றடைந்தார். இந்தோனேசியாவின் மேற்கே, கிழக்கு பகுதியில் வீற்றிருக்கும் திமோர் லெஸ்டேவிற்கு பிரதமர் மேற்கொண்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது அதிகாரத்துவ வருகையின் போது விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகம் பொங்க மகத்தான வரவேற்பு நல்கப்பட்டது.

ஆசியானின் 11 ஆவது உறுப்பு நாடு என்ற முறையில் திமோர் லெஸ்டேவிற்கும் மலேசியாவிற்கும் இடையில் இருவழி உறவை வலுப்படுத்தும் வகையில் பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

பிரதமரின் சிறப்பு விமானம் மலேசிய நேரப்படி பிற்பகல் 1.43 மணியளவில் பிரேசிடெண்ட் நிகோலாவ் லொபாத்தோ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது. பிரதமருடனான இந்தப் பயணத்தில் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின், தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல், பிரதமர் துறை மற்றும் வெளியுறவு அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

Related News