Oct 24, 2025
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் லெவோடோபி லக்கி லக்கி எரிமலை குமுறும் அபாயம்

Share:

ஜகார்த்தா, பிப்.13-

புளோரஸ் தீவில் உள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை குமுறும் எச்சரிக்கை அளவை இந்தோனேசியா உயர்த்தியிருக்கிறது. அதிகரித்த நில அதிர்வு மற்றும் எரிமலை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எச்சரிக்கை அளவு மிக உயரிய நிலைக்கு உயர்த்தப்பட்டது. அதே சமயம் ஆறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தத்தம் இருப்பிடங்களைக் காலி செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில், 1,703 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலை பல முறை வெடித்து, ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதனால் பாலி தீவுக்கான பல அனைத்துலக விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தோனேசிய புவியியல் ஏஜென்சியின் தலைவர் முஹம்மது வாஃபிட் ஒரு அறிக்கையில், காட்சி கண்காணிப்பு மற்றும் நில அதிர்வு செயல்பாடு எரிமலை நிலநடுக்கங்கள் திடீரென அதிகரிப்பதைக் காட்டியது. எதிர்காலத்தில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறினார். இன்று அதிகாலை வரை நான்கு அடுக்கு அமைப்பில் எச்சரிக்கை உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

"லெவோடோபி லக்கி-லக்கி மலையைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் கடுமையான மழையின் போது இந்த மலையின் உச்சியில் இருந்து உருவாகும் ஆறுகளில் எரிமலை வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

இந்தோனேசியா, ஒரு பரந்த தீவு நாடாக, பசிபிக் நெருப்பு வளையத்தில் அதன் நிலைப்பாட்டின் காரணமாக அடிக்கடி நில அதிர்வு மற்றும் எரிமலை குமுறல்களால் பாதிக்கப்படுகிறது.

Related News