சிங்கப்பூர், டிசம்பர்.30-
சிங்கப்பூரர்களை மோசடி வலையில் சிக்க வைக்க, கம்போடிய மோசடிக் கும்பலுக்கு உதவி செய்து வந்ததாக நம்பப்படும் மலேசியர் ஒருவர், நேற்று சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Goh Eugene என்ற அந்த ஆடவர் இன்று செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார்.
Phnom Penh -ஐச் சேர்ந்த மோசடிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 24 வயதுடைய Goh, அவர்களின் கட்டளைக்கு இணங்க, அரசு அதிகாரி போல் நடித்து, சிங்கப்பூரர்களிடம் மோசடி வேலைகளைச் செய்து வந்ததாக நம்பப்படுகின்றது.
அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையோ அல்லது 1 லட்சம் டாலர் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.








