நியூயார்க்: அமெரிக்காவில் வெளியான எப்ஸ்டீன் லிஸ்ட் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் இந்த "பலான லிஸ்டில்" சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன எப்ஸ்டீன் லிஸ்ட்? அந்த நாட்டையே இந்த லிஸ்ட் உலுக்க என்ன காரணம்?
ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் அமெரிக்காவை சேர்ந்த பிஸ்னஸ் மேன். விர்ஜின் தீவில் இவர் சில நிதி நிர்வாகம் தொடர்பான நிறுவனங்களை நடத்தி வந்தார். அந்த நாட்டு நீதிமன்றத்தால் பாலியல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் . எப்ஸ்டீன்விர்ஜின் தீவில் தனக்கு என்று தனியாக ஒரு தீவு வாங்கி.. அங்கே பெரிய மாளிகை கட்டி.. அதில் பல பெண்கள் மற்றும் குழந்தைகளை பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் பல பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்களை இங்கே அழைத்து வந்து அவர்களுக்கு "சேவைகளை" வழங்கி உள்ளார். முக்கியமாக சிறுமிகளை சப்ளை செய்துள்ளார்.
யார் இவர்?: இதற்காக அவர் ஒரு "கல்ட்" குழுவை உருவாக்கியதோடு.. கிளப் போல இதை நடத்தி அடிக்கடி அங்கே பிரபலங்களை வரவழைத்து சிறுமிகளை சித்திரவதை செய்துள்ளார்.
இதை பல ஆண்டுகளாக இவர் எந்த பிரச்சனையும் இன்றி செய்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் 2005 ஆம் ஆண்டில், புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள போலீசார், எப்ஸ்டீனை கைது செய்தனர் . தனது 14 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெற்றோர் தெரிவித்த புகார் ஒன்றை அடுத்து, அவரை விசாரிக்கத் தொடங்கினர்.