பாங்கோக், நவம்பர்.12-
கடந்த நவம்பர் 1-ஆம் தேதி, சுங்கை கோலோக் பகுதியில், மலேசியப் பிரஜை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில், போதைப் பொருள் இல்லை என்பதை தாய்லாந்து போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆடை வர்த்தகம் தொடர்பான தகராறு முற்றியதில், இக்கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கிளந்தானைச் சேர்ந்த முன்னாள் கால்பந்தாட்ட வீரரிடம், நிறைய பணம் கடனாகப் பெற்றுள்ள 33 வயதான ஃபுவாட் ஃபாமி கஸாலி, அதனைத் திருப்பிக் கொடுப்பதில், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் மூன்றாவது முறையாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இக்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.








