Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சிறுவர்களின் வயதுக்கு வரம்பு விதிக்கவுள்ள அவுஸ்திரேலியா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சிறுவர்களின் வயதுக்கு வரம்பு விதிக்கவுள்ள அவுஸ்திரேலியா

அக்டோபர் 10-

மன மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய கவலைகளை மேற்கோள் காட்டி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்காக, சிறுவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க அவுஸ்திரேலியா உத்தேசித்துள்ளது.

இந்த திட்டம் டிஜிட்டல் உரிமை சட்டத்தரணிகளின் எச்சரிக்கையை அடுத்து அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அவுஸ்திரேலியா பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில், இந்த வயது வரம்பு 14 முதல் 16 வரை இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறுவர்களை, சமூக ஊடக சாதனங்களில் இருந்து விலக்கி, அவர்களை நடைப்பயிற்சி, நீச்சல் குளங்கள் மற்றும் டென்னிஸ் மைதானங்களின்; பார்க்க விரும்புவதாக அல்பனீஸ் அவுஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், சமூக ஊடகங்களில் வயதுக் கட்டுப்பாட்டை விதித்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறும் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டபோதும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →