Oct 30, 2025
Thisaigal NewsYouTube
முழு வீச்சில் விசாரணை தொடங்கியது ஏர் இந்தியா
உலகச் செய்திகள்

முழு வீச்சில் விசாரணை தொடங்கியது ஏர் இந்தியா

Share:

புதுடெல்லி, ஜூன்.14-

இந்தியா, ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா போயிங் 787 டிரிம்லைனர் விமான விபத்து குறித்து புலன் விசாரணை இன்று முழு வீச்சில் தொடங்கியது.

241 பேரைப் பலி கொண்ட இந்த விமான விபத்தில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மருத்துவர் தங்கும் விடுதியில் காயமுற்ற மேலும் 24 பேர் தொடர்பிலும் விசாரணை தொடங்கியது என்று இந்திய வான் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் விமானம், ஆமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட அடுத்த ஐந்து நிமிடத்திலேயே விமானியிடமிருந்து வந்த, ஆபத்து அவசர உதவிக் கோரி மேடேய், சொல், பிற்பகல் 1.40 மணியளவில் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் பதிவாகியுள்ளது.

அதனை அடிப்படையாகக் கொண்டே விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வான் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

இதனிடைய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதைக் கண்டறிய முடியும் என்று அப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related News