Oct 20, 2025
Thisaigal NewsYouTube
நெருங்கிவிட்டோம்.. கேன்சருக்கு வருகிறது தடுப்பு வேக்சின்.. ரஷ்ய அதிபர் புடின் பரபரப்பு அறிவிப்பு!
உலகச் செய்திகள்

நெருங்கிவிட்டோம்.. கேன்சருக்கு வருகிறது தடுப்பு வேக்சின்.. ரஷ்ய அதிபர் புடின் பரபரப்பு அறிவிப்பு!

Share:

மாஸ்கோ: ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வு உள்ளதாகவும், விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

புடின் இது தொடர்பாக ஊடகங்களில் பேசுகையில், புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும், என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவை மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும், கேன்சர் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது என்ன மாதிரியான வேக்சின்.,. ஊசியா.. வேறு எதுவுமே? எப்படி செயல்படும்? என்ன தொழில்நுட்பம்? என்றெல்லாம் புடின் விளக்கம் அளிக்கவில்லை.

கேன்சர் பாதிப்பு: வருடங்கள் ஓடினாலும்.. பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத.. குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது கேன்சர்தான்! பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் கேன்சருக்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

Related News