Oct 29, 2025
Thisaigal NewsYouTube
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது
உலகச் செய்திகள்

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

Share:

கொழும்பு, மே.22

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. தற்கொலைப் படைகள் மூலம் தேவாலயங்கள், முக்கிய நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 270 பேர் உயிரிழந்தனர்.

உளவுத்துறை எச்சரித்தும், தாக்குதலைத் தடுக்க இலங்கை அரசு தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில் அப்போதைய அதிபர் சிறிசேனா, புலனாய்வுத்துறை இயக்குனர் நிலந்தா ஜெயவர்தனே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி 661 பேருக்கு 8.8 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாக அட்டார்னி ஜெனரலுக்கான துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்த சிறிசேனா ஒரு குழுவை நியமித்தார். அக்குழு தாக்குதல் குறித்த முன்கூட்டியே உளவுத்துறை அறிக்கைகளைப் புறக்கணித்ததாக சிறிசேனா மீது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Related News