அடிஸ் அபாபா, அக்டோபர்.02-
எத்தியோப்பியாவில் கட்டுமானப் பணி நடந்து வந்த தேவாலயத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 25 பேர் உயிரிழந்தனர்.
எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த தேவாலயத்தில் அதிகாலை நேரத்தில் வழிபாடு நடத்த மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
நாங்கள் அனைவரும் பிரார்த்தனைச் செய்ய கூடியிருந்தோம். அப்போது திடீரென தேவாலயத்தில் கட்டுமான பணி நடந்து ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் பலர் உயிரிழந்தனர். எனது மூன்று நண்பர்களும் உயிரிழந்தனர். விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.