Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஈரான்: அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்பு.. 103 பேர் பலி.. ரிமோட் மூலம் வெடிக்கச் செய்ததாக தகவல்!
உலகச் செய்திகள்

ஈரான்: அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்பு.. 103 பேர் பலி.. ரிமோட் மூலம் வெடிக்கச் செய்ததாக தகவல்!

Share:

தெஹ்ரான்: ஈரான் கெர்மானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 103 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்புகளில் படுகாயமடைந்த 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மீது ஈரான் கடும் கோபத்தை வெளிப்படுத்தியது. ஆனால் சுலைமானி படுகொலையை அமெரிக்கா அப்போது நியாயப்படுத்தியது. குறிப்பாக அமெரிக்கா அதிபராக இருந்த டிரம்ப் இப்படுகொலையை நியாயப்படுத்தி இருந்தார்.

இந்த பின்னணியில் ஈரானின் கெர்மானில் காசிம் சுலைமானி கல்லறையில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இன்று கூடியிருந்தனர். அப்போது அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

Related News