Oct 20, 2025
Thisaigal NewsYouTube
"அமெரிக்காவுக்குச் செல்லும் சீனக் குடிமக்கள் எதிர்பாராச் சூழ்நிலைகளுக்குத் தயாராக இருக்கவேண்டும்!"
உலகச் செய்திகள்

"அமெரிக்காவுக்குச் செல்லும் சீனக் குடிமக்கள் எதிர்பாராச் சூழ்நிலைகளுக்குத் தயாராக இருக்கவேண்டும்!"

Share:

அமெரிக்கா, மார்ச் 31 -

சீனா, அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளும் தனது குடிமக்கள் சோதனைகள் உள்ளிட்ட எதிர்பாராச் சூழ்நிலைகளுக்குத் தயாராய் இருக்கவேண்டும் என்று எச்சரித்திருக்கிறது.

அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் சீன மாணவர்களையும் நிறுவன ஊழியர்களையும் அண்மைக் காலத்தில் தேவையில்லாமல் விசாரிப்பதாக பெய்ச்சிங் கூறுகிறது.

அதை எதிர்த்து வாஷிங்டனிடம் அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகச் சீனா குறிப்பிட்டது.

நாட்டு மக்களை முன்னெச்சரிக்கையுடன் செயல்படும்படியும் பெய்ச்சிங் வலியுறுத்தியது.

ஏற்கெனவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பிரச்சினைகள் நிலவுகின்றன.

அண்மையில் ஹாங்காங் அதிகாரிகள் சிலருக்கு அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்தைச் சீனா சாடியது.

கடந்த ஓராண்டில் சீனாவின் செயல்களுக்குப் பதிலடி அது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் கூறினார்.

Related News